technology

img

ட்விட்டர் லோகோ மாற்றம்?

ட்விட்டரின் லோகோவான நீலப் பறவையை "எக்ஸ்" ஆக மாற்றப்  போவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.

எலோன் மஸ்க் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில் “ட்விட்டர் தளத்தின் நிறத்தை கருப்பாக மாற்ற வேண்டும்” என கருத்துக்கணிப்பு ஒன்றை தொடங்கியுள்ளார். மற்றொரு பதிவில், ”விரைவில் ட்விட்டரின் பிராண்டை மாற்ற உள்ளதாகவும் அதைத் தொடர்ந்து அனைத்து பறவைகளும் விடுவிக்கப்படும்” எனவும் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ் லோகோ இன்று இரவு வெளியானால், நாளை அது உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் பயானாளிகளுக்கு செயல்பாட்டிற்கு வரும் எனவும் மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார். அதோடு, ட்விட்டரின் புதிய லோகாவான ”எக்ஸ்” தொடர்பான சிறிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.